August 29, 2017 தண்டோரா குழு
மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மும்பை மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2௦௦5ம் ஆண்டு, மும்பை நகரில் பெயந்த கனமழையால், நகரமே வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால், தற்போது பெய்து வரும் மழை , 2௦௦5ம் ஆண்டு பெய்த கனமழையை விட மோசமாக இருக்கிறது என்று மும்பை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், மும்பையின் தாழ்வான இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து, ரயில் மற்றும் விமான சேவைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மாணவ மாணவிகள் சீக்கிரமே வீட்டிற்கு அனுப்பிவிடபடுகிறனர். அலுவலகங்களில் பணி புரிபவர்களை சீக்கிரமே வீட்டிற்கு செல்லுமாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
அவசரமான சூழ்நிலையை தவிர மக்கள் வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்ல வேண்டாம். கடல் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மும்பை மாநகராட்சி மக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை மும்பை மக்களுக்கு உதவ வந்துள்ளது.மும்பை நகரிலுள்ள பல சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது. கிங் மெமோரியல் மருத்துவமனையில் மழை தண்ணீர் புகுந்ததால், குழந்தைகள் வார்டில் உள்ள குழந்தைகளை மருத்துவர்கள் வெளியேற்றியுள்ளனர். அவசர உதவிக்கு எண் 1௦௦ அழைக்குமாறு மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.