August 30, 2017
தண்டோரா குழு
சட்டப்படி தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஆளுநர் கூறியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாளவன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் இடம் பெற்றிருந்த 19 சட்டமன்ற உறுப்பினா்கள் முதல்வா் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக தெரிவித்தனர். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், ஜெவாஹிருல்லா ஆகியோர் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினா்.
இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர்,
அதிமுக இரு குழுவாக பிரிந்துள்ளதால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடும் விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் 19 எம்எல்ஏக்களும் அதிமுகவில் இருந்து விலகினால் மட்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியும் என தெரிவித்துள்ளார்.