• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மும்பை கனமழையில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி

August 31, 2017 தண்டோரா குழு

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருந்த 5 மாடி குடியிருப்பு இடிந்து விழுந்தத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில், கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், அந்நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பையிலுள்ள பெண்டி பஸார் பகுதியின் 5 மாடி குடியிருப்பு கட்டடம் இன்று காலை(ஆகஸ்ட் 31) இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்,மேலும் 2௦ பேர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உதவியுடன் அந்த கட்டட இடிப்பாடுகளிருந்து 2 உடல்கள் வெளியே எடுத்தனர்.

“இடிந்து விழுந்த கட்டட குடியிருப்பு, ஆபத்தான அமைப்புகள் பட்டியலில் இருந்ததா? என்று தெரியவில்லை. மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, அதன் அடித்தளம் வலுவிழந்து இருக்கலாம். பெண்டி பஸார் பகுதியிலுள்ள கட்டமைப்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அங்குள்ள சில வீடுகள் சுமார் 1௦௦ ஆண்டுகள் பழமையானது” என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க