August 31, 2017 தண்டோரா குழு
லண்டனில் ஒரு கிறித்துவப் பெண் குழந்தை ஒரு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வளர்ப்புக் குடும்பத்தின் பராமரிப்பில் விடப்பட்டதால் மீண்டும் அந்தக் குழந்தையை பாட்டியுடன் சேர்த்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டனில் 5 வயது சிறுமியை, அதனுடைய தாய் வளர்க்க மறுத்ததையடுத்து, அநாதை பிள்ளைகளை தத்துக்கொடுக்கும் நிறுவனம், அந்த சிறுமியை ஒரு முஸ்லிம் குடும்பத்தினருடன் தத்துக்கொடுத்தது. அதன் பிறகு, அந்த நிறுவனம் சிறுமியின் வளர்ப்பை கவனித்து வந்தது.
இந்நிலையில் அந்த சிறுமியின் தாய், அவளுக்கு சிலுவை சின்னம் போட்ட ஒரு நெக்லஸ்சை தந்திருந்தார். அந்த நெக்லஸ்சை அணியக்கூடாது என்றும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, முஸ்லிம் மக்கள் அணியும் பர்தா அணிந்து செல்ல வேண்டும் என்று வளர்ப்புதாய் கூறினார்.
இதற்கிடையில் அந்த சிறுமி கட்டாயம் அரபு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டயப்படுத்தப்பட்டதாக அந்த நிறுவனத்திற்கு தெரியவந்தது. மேலும், அந்த சிறுமியின் தந்தை யார் என்று தெரியாததால், அவரை கண்டுபிடிக்க முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது.
இதனையடுத்து அவளை அவளுடைய பாட்டியின் வளர்பில் இருப்பது பாதுகாப்பானது” என்று அந்த நிறுவனம் கருதியது.எனினும் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல், அதை செய்ய முடியாது என்பதால், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த சிறுமியை அதன் பாட்டியிடம் ஒப்படைப்பது தான் சரியானது என்று தீர்ப்பளித்தார்.