August 31, 2017
தண்டோரா குழு
கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றிசோஹைல் தன்வீர் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் போட்டியை போன்று வெஸ்ட் இண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பொலார்ட் தலைமை பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணியும், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும் மோதியது.
முதலில் பேட் செய்த அமேசான் அணி 158 ரன்களை எடுத்து. 159 எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பாரபடாஸ் டிரைடண்ட்ஸ் அணி சோஹைல் தன்வீரின் அனல் பறந்த முதல் ஸ்பெல்லில் அவரிடம் 2 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. பவர் பிளே முடிவில் பாரபடாஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 19 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வந்தது. தொடக்கத்தில் 4 விக்கெட்டுகளைக் கைபற்றிய தன்வீர் பிறகு 5-வது விக்கெட்டையும் கைப்பற்றி 3 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பந்து வீச்சுக்கான சாதனை நிகழ்த்தினார்.இதனால் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி 13.4 ஓவர்களில் 59 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
சோஹைல் தன்வீர் எடுத்த அனைத்து விக்கெட்டுகளும் முக்கிய வீரர்களே டிவைன் ஸ்மித்(2), கேன் வில்லியம்சன் (0), இயான் மோர்கன் (0), கெய்ரன் பொலார்ட் (0) வஹாப் ரியாஸ் (0). ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்தினார்.