August 31, 2017
தண்டோரா குழு
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்து வரும் படம் ‘வேலைக்காரன்’.
இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இப்படம் குறித்தும் சிவகார்த்திகேயன் குறித்தும் நயன்தாரா பேட்டியளித்துள்ளார்.
அதில், “படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் மிகவும் அமைதியாக இருப்பார். படத்தில் வசனங்கள் பல பக்கங்கள் இருக்கும். ஒரு நாள் இரவு 1-2 மணி இருக்கும் போது அவருக்கு பல பக்கங்கள் கொண்ட வசனங்கள் கொடுத்தார்கள். அப்போது அவர் 10 நிமிடம் கொடுக்க முடியுமா என்று கேட்டு படித்துவிட்டு உடனே வந்து நடித்தும் முடித்து விட்டார். சத்தியமாக 10 நிமிடத்தில் அவ்வளவு பெரிய வசனங்களை பேசவே முடியாது. ஆனால் அவர் முடித்து விட்டார். அவர் மிகவும் திறமையானவர்” என்று கூறியுள்ளார்.