August 31, 2017 தண்டோரா குழு
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இன்று (ஆகஸ்ட் 31) தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
2017- 18-ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமானால் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கப்படுவது அவசியம். இதனால் இன்று தான் கடைசி நாள் என்பதால் பொதுமக்கள் அவசர அவசரமாக பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணையதளத்தில் இணைத்து வந்தனர்.
இந்நிலையில், தற்போதைய புதிய அறிவிப்பின் படி ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதற்கான கடைசி நாள் டிசம்பர் 31 ஆகும். அப்படி இணைக்காதவர்கள் பின்னர் வருமான வரி தாக்கல் செய்யும் போது அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை வரும் என கூறப்படுள்ளது.
மேலும், ஆதார் – பான் கார்டு இணைப்புக்காக வருமான வரித்துறையின் இணையதளத்தில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி www.incometax, indiaefiling.gov.in என்ற இணையதள பக்கத்தில் நுழைந்து முதலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஆதார் – பான் இணைப்புக்கான பக்கத்தில் விவரங்களை அளித்து இணைத்து கொள்ளலாம்.பான் மற்றும் ஆதாரில் உள்ள பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.