September 1, 2017 தண்டோரா குழு
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் நபா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தொிவித்துள்ளாா்.
அதிமுகவில் இ.பி.எஸ் அணியினரும், ஓ.பி.எஸ் அணியினரும் இணைந்ததை தொடா்ந்து டி.டி.வி.தினகரன் தலைமையில் 19 சட்டமன்ற உறுப்பினா்கள் தனி அணியாக பிாிந்தனா்.
மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது, இது கட்சி சம்பந்தப்பட்ட விஷயம் என்று கூறி மறுத்து விட்டார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் வருகிற 12-ந்தேதி அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டப்போவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடா்பாக இன்று காலை டிடிவி தினகரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிவிப்பில், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள பொதுக்குழுவிற்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க.வின் சட்டதிட்டத்தின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.
மேலும்,இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் யாரும் பங்கேற்க கூடாது மீறும் நபா்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.டி.வி.தினகரன் தொிவித்துள்ளாா்.