September 1, 2017 தண்டோரா குழு
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய நேரடி முதலீடுக்கான அனுமதி விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது.இது தொடர்பாக நேரில் ஆஜராக சி.பி.ஐ., சம்மன் அனுப்பியது. ஆனால், சம்மனை கார்த்தி சிதம்பரம் புறக்கணித்ததால், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கும் படி கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியாது என்றும்,லுக் அவுட் நோட்டீஸ் தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கை செப் 11ம் தேதி ஒத்தி வைத்தது.