September 1, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் ஹார்வே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக 1 மில்லியன் டாலரை அந்நாட்டு குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் வழங்கினார்.
அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகணத்தை ஹார்வே புயல் தாக்கியது. அந்த மாகாணத்திலிருக்கும் ஹூஸ்டன், நகரம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் 3௦ பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் அழிந்து போயின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. புயலின் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அதன் பிறகு, டெக்ஸ்சாஸ் மற்றும் அதன் அருகிலிருக்கும் லூயிசானா மாகாணத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு, அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்க சுமார் 8,000 அதிகாரிகளை அனுப்பியுள்ளார்.
மேலும் இந்த புயல் தாக்குதலில் சிக்கி தவித்து வரும் மக்களின் நிவாரணத்திற்காக அமெரிக்க குடியரசு தலைவர் 1 மில்லியன் டாலர் வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.