September 1, 2017
தண்டோரா குழு
தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனிதாவின் தற்கொலை செய்து கொண்ட செய்தியை கேட்டு நான் மிகவும் துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் நிதி உதவி வழங்க உத்திரவிட்டுள்ளேன்.
மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.