• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாவில் பிடிபட்ட விசித்திர விலங்கு

June 4, 2016 dailymail.co.uk

இமயமலைப் பகுதியில் வாழ்கின்ற மனிதர்களின் கண்களில் படாமல் மறைவாக அங்கே வாழ்கின்ற யெதி என்ற பிராணியைக் கைப்பற்றி விட்டதாகச் சீன அரசு தெரிவித்து உள்ளது. அது யெதிதானா அல்லது வேறு விலங்கா என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

இமயமலையில் “யெதி” என்கிற பனி மனிதன் உலவுவதாகவும், மிகப்பெரிய கால் தடங்களைக் கொண்டு அது யெதிதான் என்று தாங்கள் ஊகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு. அத்துடன் அந்த யெதியைப் பற்றிய பரம்பரைக் கதைகளும் உலவுவதால் ஆராய்ச்சியாளர்கள் யெதியைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.

இமயமலையில் மலையேறும் குழுக்களைச் சேர்ந்த சில வீரர்களும் விறகு வெட்டுவோரும், தண்ணீர் எடுத்துக் கொண்டு வரச் சென்ற கிராமவாசிகளும் யெதியைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் யெதி நடந்து செல்லும் வேகத்துக்குத் தங்களால் ஈடு கொடுக்க முடியாததால் பின் தொடர முடிந்ததில்லை என்றே தெரிவித்துள்ளனர். யெதியின் காலடித்தடம் மிகப் பெரியது. எனவே, அதன் உருவமும் மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

இந்நிலையில் மத்திய சீனாவில் சிசுவான் மாகாணத்தில் வினோதப் பிராணியை வேட்டைக்காரர்கள் கண்ணி வைத்துப் பிடித்திருக்கின்றனர். ஆனால் அது யெதிதான் என்று உறுதியாக்கப்படவில்லை.

கரடியைப் போன்ற உருவத்தைக் கொண்டது ஆனால் கரடியைப் போல ரோமங்கள் இல்லை, கங்காரு போல நீண்ட வாலை உடையது. ஆனால், கங்காருவைப் போல துள்ளிக் குதிக்கவில்லை, கரடியைப் போல கட்டைக் குரல் இல்லை, பூனையைப் போன்ற மென்மையான குரல் ஆகியவற்றுடன் இருக்கிறது. இந்த வினோதப் பிராணி. பிடிபட்டது முதலே விடாமல் கத்திக் கொண்டிருக்கிறது.

அது தன் இனத்தாரை துணைக்கு அழைப்பதைப் போலத் தெரிகிறது. ஆனால் அதன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பிராணி எதுவும் அது வைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு வரவேயில்லை. மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இது பிடிபட்டது. கரடியைப் போல உருவம் என்பதால் தூரத்திலிருந்து பார்க்க மனிதனைப் போன்றே தெரிந்தது. ஆனால் அது மூர்க்கத்தனமாக எதையும் செய்யவில்லை.

இப்போது அந்தப் பிராணியை பெய்ஜிங்கில் உயர் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவில் மேலும் பல விவரங்கள் தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க