September 2, 2017
tamilsamyam.com
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – சீனாவின் பெங்க் சுவாய் இணை 2வது சுற்றுக்கு முன்னேறியது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்றுப் போட்டியில் சானியா இணை, குரோஷியாவின் பெட்ரா மார்டிக் – டோனா வெகிக் இணையை இன்று எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் 6-4, 6-1 என்ற நேர் செட்களில் சானியா இணை எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு சானியா இணை தகுதி பெற்றுள்ளது.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் ஸ்லோவாக்கியாவின் ரிபென்கோவா-செபிலோவா இணையை எதிர்த்து சானியா-பெங்க் இணை களமிறங்கும்.