June 4, 2016 தண்டோரா குழு
மெகா பட்ஜெட்டில் சரித்திரப்படம் எடுக்க இயக்குநர் சுந்தர்.சி. திட்டமிட்டுள்ளார்.
சரித்திரகாலத்தை பின்னணியாகக் கொண்டு 250 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு தென்னிந்தியாவின் மிகப்பெரிய ஹீரோவைப் புக் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
இதற்காக சூர்யா மற்றும் மகேஷ் பாபுவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல, ஒளிப்பதிவாளர் திரு, கலை இயக்குநர் சாபு சிரில் மற்றும் பாகுபலி படத்துக்கு கிராபிக்ஸ் வேலைகளை மேற்கொண்ட கமலக் கண்ணன் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக இது அமையும் என்பதால், மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கும் இந்தப் படம் பாகுபலி, மகதீரா படங்களுக்குச் சவால் விடும் வகையில் அமையும் என்று கோலிவுட் வட்டாரம் இப்போதே கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.
இந்தப்படத்திலயும் உங்க வழக்கமான நகைச்சுவை உணர்வு அதிகமா இருக்குமா சுந்தர்ஜி………….