September 2, 2017 தண்டோரா குழு
அகமதாபாத்தில் ஒரு மாத குழந்தையின் வாயிலிருந்து 7 சிறிய பற்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் குழந்தை பிறக்கும்போதே, அதன் வாயில் 7 பற்கள் இருந்தது. அந்த பற்களை வெளியே எடுக்க வேண்டும் என்று அந்த குழந்தையின் பெற்றோர் முடிவு செய்தனர்.
இதையடுத்து, அந்நகரிலுள்ள சிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.அக்குழந்தையை பரிசோதித்த குழந்தை நல மருத்துவர் நிரவ் பெனானி மற்றும் பல் மருத்துவர் மித் ரமட்ரி இப்பிரச்சனை மிகவும் சிக்கலானது.இதை மிகவும் ஜாக்கிரதையாய் கையாள வேண்டும் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 15 நிமிடம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், 7 பற்களையும் நீக்கினர்.சிகிச்சைக்கு பிறகு, அந்த குழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.