September 2, 2017 தண்டோரா குழு
தஜிகிஸ்தான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய கூடாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தான் நாட்டில் எராளமான முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.தஜிகிஸ்தான் நாட்டில் வாழும் முஸ்லிம் பெண்கள் பர்தா உடைக்கு பதிலாக அந்நாட்டின் நாட்டின் பரம்பரை மற்றும் கலாசார ஆடைகளை அணிந்து, துப்பட்டாவால் தங்கள் தலையை மட்டும் மூடிக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுக்குறித்து, தஜிகிஸ்தான் நாட்டின் கலாச்சார துறை அமைச்சர் கூறுகையில்,
“முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பல நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் அணியும் அந்த உடைக்குள் என்ன வைத்திருக்கின்றனரோ? என்று முஸ்லிம் அல்லாத மக்கள் பயத்துடன் அவர்களை பார்க்கும் நிலை ஏற்படுகிறது. அதனால் முஸ்லிம் பெண்கள் பர்தா உடையை அணிய வேண்டாம்” என்று கூறினார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் தஜிகிஸ்தான் நாடு அரசு அலுவலகங்களுக்கு வரும் பெண்கள் பர்தா அணிய தடை விதித்தது. பர்தாவிற்க்கு பதில் துப்பட்டாவால் தங்கள் தலைகளை மூடிக்கொள்ளலாம் என்றும் அந்த புதிய உத்தரவை கடைபிடிக்க தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அந்நாடு அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.