September 6, 2017 தண்டோரா குழு
சென்னை,ஆா்.கே.நகாில் விரைவில் இடைத் தோ்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதி கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக காலியாக உள்ளதால் உடனடியாக தேர்தலை நடத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளையும் மீறி பொதுமக்களுக்கு பணம், உள்ளிட்ட பாிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மதுரையை சோ்ந்த கே.கே.ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவில், ஆர்.கே.நகர் தொகுதி 6 மாதங்களுக்கு மேலாக காலியாக உள்ளது. எனவே இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஜூலை 3-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.