September 7, 2017
manakkumsamayal.com
தேவையான பொருட்கள்:
முட்டை – 3
காலிபிளவர் – பாதி
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்த்தூள் – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்- சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
தனியாத்தூள் – 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் காலிபிளவரை துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து முக்கால் வேக்காடு வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, அரைத்த பச்சை மிளகாய் போன்றவற்றை முட்டையுடன் போட்டு நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு அதில் வேக வைத்த காலிபிளவரை ஒவ்வொன்றாக போட்டு முக்கி எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.