September 8, 2017
tamilsamayam.com
புரோ கபடி லீக் தொடரில் புனே அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி ஆறாவது வெற்றியை பதிவு செய்தது.
12 அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல நகரங்களில் நடக்கிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த 65-வது லீக் போட்டியில் புனே பால்டன் அணி 42-37 என தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் புனே அணி இத்தொடரில் தனது ஆறாவது வெற்றியை பதிவு செய்தது. பெங்கால் வாரியர்ஸ், டெல்லி தபாங் அணிகள் மோதிய மற்றொரு போட்டி 31-31 என ’டிரா’ ஆனது.
இன்றைய போட்டியில் அரியானா -பாட்னா பைரட்ஸ், குஜராத்-உத்தரபிரதேச அணிகள் மோதுகின்றது.