September 8, 2017 தண்டோரா குழு
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் விவாகரத்து செய்த மனைவிக்கு ஜீவனாம்சம் தர முடியாத காரணத்தால், தன்னுடைய சிறுநீரகத்தை விற்பதாக அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் அஹிர்வார் ப்ளம்பராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இதுக்குறித்து நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒவ்வொரு மாதமும் மனைவிக்கு 2,2௦௦ ரூபாய் ஜீவனாம்சம் செலுத்த வேண்டும் என்று பிரகாஷிற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஒவ்வொரு மாதமும் மனைவிக்கு ஜீவனாம்சம் தர முடியாததால், தன்னுடைய சிறுநீரகத்தை விற்கயிருப்பதாக பிரகாஷ் அந்நகரின் பல பகுதியில், விளம்பரம் செய்துள்ளார்.
“கடந்த 2௦௦2ம் ஆண்டு எங்களுக்கு திருமணம் நடந்தது. எங்களுக்கு திருமணம் நடந்தபோது, என் மனைவி 8ம் வகுப்பு வரை தான் படித்திருந்தாள். மேலே படிக்கும்படி அவளை ஊக்குவித்து, அவளுடைய படிப்பின் செலவுகளை ஏற்றுக்கொண்டேன். பள்ளி படிப்பை முடித்துவிட்டு, இளநிலை பிஏ பட்டம் பெற்றாள். அதன் பிறகு, டிப்ளோமா கணனி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றாள். பிறகு பி.எட் படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாள்.
கடந்த 2௦15ம் ஆண்டு, திடீரென்று என்னை விட்டுவிட்டு விவாகரத்து வேண்டும்மென்று நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தாள். எவ்வளவோ சமாதானம் செய்தும், அவளுடைய முடிவை மற்ற மறுத்துவிட்டாள். வேறு வழியில்லாமல் இருவரும் விவாகரத்து செய்தோம். அவளுக்கு ஒவ்வொரு மாதமும் 2,2௦௦ ரூபாய் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அந்த ஜீவனாம்சத்தை தர என்னால் முடியவில்லை. அதனால் தான், என்னுடைய சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தேன்” என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.