September 8, 2017 தண்டோரா குழு
சீனாவின் அலிபாபா நிறுவனம் கேஏப்சி நிறுவனத்துடன் சேர்ந்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
சீனாவின் பிரபல கேப்சி உணவு விடுதி உள்ளது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த ” Pay to Smile” என்னும் புதிய திட்டத்தை சீனாவின் அலிபாபா நிறுவனம் கேஎப்சியுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள், அங்கிருக்கும் சுய சேவை திரையில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்த பிறகு, அந்த திரையை பார்த்து ஸ்மைல் செய்ய வேண்டும். அந்த திரையிலிருக்கும் 3டி கேமரா மூலம், அந்த வாடிக்கையாளரின் அடையாளம் சரிபார்க்கப்படும்.அதோடு அவர்களுடைய தொலைபேசி எண்ணும் சரிபார்க்கபடும். அதன் பிறகு, உணவு கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் கைபேசியில் Alipay செயலியை பதிவு செய்திருப்பவர்கள் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.அலிபாபா நிறுவனத்தின் முக்கிய முதலீடுகள் ஒன்றனான Yum China வின் துணை நிறுவனமாக கேஎப்சி இருப்பதால், அந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் இளைஞர்களை அதிகமாக ஈர்க்கும் திட்டமாக இருக்கும் என்று அலிபாபா நிறுவனம் அறிவித்துள்ளது.