June 7, 2016 தண்டோரா குழு
ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் அவனுடைய உடல் உறுப்புக்கள் அனைத்தும் முறையாகச் செயல்பட வேண்டும். அவற்றில் ஒன்று செயல் இழந்தாலும் அது அவருடைய உடல் நலத்தைப் பாதிக்கும். இவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகம். எனவே அதை இறைவன் அனைவருக்கும் இரண்டாகப் படைத்துள்ளான்.
சிறுநீரகம் எப்போது வேலை செய்யாமல் பழுதடைகிறதோ அப்போது மனிதனில் நடமாட்டம் குறைந்து நோயாளியாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தற்போது நவீன மருத்துவ முறையில் ஒருவருக்கு இரண்டு கிட்னியும் வேலை செய்யவில்லை என்றால் மற்றவரிடம் இருந்து ஒன்றைப் பெற்று இருவரும் உயிர் வாழலாம். இதனால் மனிதனின் கிட்னி தற்போது தங்கத்தை விட விலை மதிப்பில்லாததாக உள்ளது. இதையடுத்து அரசு ரத்த சொந்தங்கள் தவிர மற்றவர்களிடம் கிட்னி தானமாக பெற அனுமதியளிப்பதில்லை.
இந்நிலையில் தற்போது நடைபெறும் கிட்னி தான மோசடிகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை ஆராய்ந்த மத்திய அரசு உடல் உறுப்பு தானத்தை முறைப்படுத்தி நேரடியாக தானம் கொடுப்பவருக்கே பயன் சேருமாறு கண்காணிப்பது என முடிவிடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு தானம் தருபவர்கள் முழு பயனையும் அடைவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சியோலின் என்ற 17 வயது பெண், குழந்தை பருவத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். பின்னர் நாளாக நாளாக அவரது முதுகின் கீழ்ப்பகுதியில் அடிக்கடி வலி ஏற்பட துவங்கியது. அதற்குச் சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் சென்ற பொது, உடனடியாக அல்ட்ராசவுண்ட் சோதனையைச் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். அந்தச் சோதனையின் முடிவுகள் வந்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவளுக்கு நான்கு சிறுநீரகம் இருப்பது உறுதி செய்யப்பட்டது தான், அவர்களுடைய அதிர்ச்சிக்குக் காரணம். இது ரீனல் டுப்லெக்ஸ் மான்ச்றோசிட்டி என்னும் நோய் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த நோயின் பாதிப்பால் 1,500 பேரில் ஒருவர் தான் இறந்து போவர் எனத் தெரிவித்தனர். பெரும்பாலான மக்கள் இந்த நோய்வந்ததற்கான அறிகுறிகள் இருப்பதில்லை. அதனால் அந்த நோயுடனே தங்கள் காலத்தைக் கழித்து விடுவர் என்றும் தெரிவித்தனர்.
மேலும், கூடுதலாக உள்ள சிறுநீரகங்கள் மற்றவை போலவே செயல்படுகின்றன. அதனால் அவற்றை வெளியே எடுப்பது எளிதான காரியமல்ல. அவற்றைத் தனியே எடுக்கவும் முடியாது மற்றும் சிறுநீரகம் தேவைப்படுவோருக்குப் பயன்படுத்தவும் முடியாத நிலை என்று தெரிவித்துள்ளனர்.
இறுதியில், உரிடேரல் ரீப்பிலான்ட்டேசன் அறுவை சிகிச்சை மூலம் கூடுதலான மற்ற இரண்டு சிறுநீரகத்தை நீக்கிவிட்டனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு சியோலின் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக அவளுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரண்டு கிட்னி இருந்தாலே நம்மாளுங்க கண்ணா பின்னானு விலை பேசுவாங்க இதுல நாலு கிட்னி இருந்தா உடனே காருக்கு ஆடர் பன்னிருவாங்கன்னு பார்த்தா வட போச்சேன்னு சொல்ற மாதிரி வெளிய எடுத்த ரெண்டு கிட்னியும் யூஸ் இல்லையாமே ஆண்டவா இதுதான் கைக்கெட்டினது வாய்க்கேட்டுலன்னு சொல்றதா…….