September 9, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டின் வழியாக ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன்
தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
“கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு அணையின் பழைய ஆயக்கட்டின் வழியாக ஒரு போக பாசனத்திற்கு, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து வரும் 10-ம் தேதி முதல் ஜனவரி 08-ம் தேதி வரை 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.க.அடிக்கு மிகாமல் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
மேலும், நஞ்சை பாசனத்திற்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5 வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடபட உள்ளது. இதனால் 6400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
ஆழியாறு, கோட்டூர், ஆணைமலை ஆகிய பகுதிளுக்குட்பட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் பயனடையுமாறு கேடுக்கொள்கிறேன்,”
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.