September 11, 2017
tamilsamayam.com
காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். இந்தப் படத்திற்கான நடிகர்கள் தற்போது தேர்வு நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ள இப்படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, துல்கர் சல்மான், நானி, பகத் பாசில் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவிற்கு இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் மற்ற ஹீரோக்களுக்கு சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இப்படத்தில் ஹீரோயின்களாக நடிக்க சாரா அலிகான, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் யார் யாருடன் ஜோடி சேர்வார்கள் என்பதை படம் வெளியாகும்போதுதான் தெரியவரும்.