September 11, 2017 தண்டோரா குழு
லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேப்பரில் தேர்வு எழுத தடை செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கையெழுத்து சரியாக புரியாத காரணத்தால், பேனா மூலம் பேப்பரில் தேர்வு எழுத அந்த பல்கலைக்கழகம் தடை விதித்துள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல் உலகின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் அங்கு கல்வி பயின்று வருகின்றனர்.இதுவரை அந்த பல்கலைக்கழத்தில் மாணவ மாணவியர்கள் பேனா மூலம் பேப்பரில் தேர்வு எழுதி வந்தனர். ஆனால், தற்போது கணினி மற்றும் ஐபேட் ஆகியவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதனால், அவர்கள் பேனாவை பயன்படுத்தி தேர்வு எழுதும்போது அவர்களுடைய கையெழுத்து சரியாக புரிவதில்லை.
மேலும்,தற்போது மாணவ மாணவியர்கள் வகுப்பில் நடக்கும் பாடங்களின் குறிப்புகளை, மடிக்கணினியில் டைப் செய்து வைத்துக்கொள்கின்றனர். அதனால், பல மாணவ மாணவிகள் கையெழுத்து மோசமாகி விடுகிறது. அவர்கள் தேர்வில் எழுதும் விடைகளை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால், அவர்களுடைய விடை தாள்களை திருத்த ஆசிரியர்கள் சிரமம் அடைகின்றனர். தேர்ச்சி விகிதமும் குறைந்து விடுகிறது.
தற்போது பல்கலைக்கழகத்தில் விதிக்கப்பட்ட தடை பலருக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. வகுப்பில் நடக்கும் பாடங்களின் குறிப்புகளை மாணவர்கள் கையால் எழுதுகிறதை பல்கலைக்கழகம் கட்டாயமாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.