September 12, 2017 தண்டோரா குழு
‘இர்மா’ புயல் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தை பயங்கரமாக தாக்கியது.இந்த புயல் தாக்கத்தின் போது,மறைந்த முன்னாள் எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயின்
பூனைகள் பத்திரமாக காப்பாற்றப்பட்டன.
அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா’ புயல், கரீபியன் தீவுகளை பதம் பார்த்தபிறகு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தை தாக்கியது. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் மறைந்த பிரபல ஆங்கில எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே
‘ஸ்னோ வைட்’ என்னும் பூனையை வளர்த்து வந்தார்.அவருடைய மறைவுக்கு பிறகு, அந்த பூனையை அவருடைய பேத்தி வளர்த்து வந்தார்.
‘இர்மா’ புயல் காரணமாக ப்ளோரிடாவில் வசித்து வந்த எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் பேத்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் வெளியேறினர். ஆனால், அவர்கள் வளர்த்து வந்த பூனைகள் அங்கேயே சிக்கிக்கொண்டன.
இதையறிந்த எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் பேத்தி, அந்த பூனைகளை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்று நினைத்து தனது மேற்பார்வையாளரிடம் தெரிவித்தார்.அவரும் வீட்டிற்கு சென்று, அங்கு சிக்கியிருந்த ஆறு பூனைகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார்.
பூனைகளை மீட்டு, ஹெமிங்வே வாங்கியிருந்த வீட்டிற்கு வந்த பிறகு, காரிலிருந்த பூனைகள் வெளியே எடுக்க முயன்றபோது, அவை வேகமாக வீட்டுக்குள் ஓடிவிட்டன. ஹெமிங்வே வளர்த்த ஸ்னோ வைட் பூனை, அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் பரிசாக தந்தது” என்பது குறிப்பிடத்தக்கது.