September 12, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் அதிக அளவு படத்தில் நடித்தாலும் அதற்கு ஏற்ப வெற்றியை தருபவர் விஜய் சேதுபதி. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார்.
விஜய்சேதுபதி அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜான் குமாராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு ஆரம்பத்தில் அநீதிக்கள் கதைகள் என்று பெயரிடப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குநர் இன்று சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
சூப்பர்டீலேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி சில்பா என்ற திருநங்கையாக நடிக்கிறார்.மேலும்,இப்படத்தில் பத்பாசில்,சமந்தா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.இயக்குநர் மிஸ்கின் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோரும் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.