September 12, 2017 தண்டோரா குழு
தமிழ் சினிமா பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்தித்து வரும் பெரும் பிரச்சனை இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளிவருவது தான்.இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
இதற்கிடையில், தொடர்ந்து முதல் நாளிலேயே படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில்,திரைப்படங்களை சட்டத்துக்குப் புறம்பாக இணையதளத்தில் பதிவேற்றும் ‘தமிழ்கன்’ நிர்வாகியைப் பிடித்த திரைத்துறையினர், அவரைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாணையில், அவர் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பதும் 100 ஐ.பி முகவரிகள் மூலம் சட்டவிரோதமாக ‘தமிழ்கன்’ இணையதளத்தில் திரைப்படங்களில் பதிவேற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காவல்நிலையத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட திரைப்பட சங்க நிர்வாகிகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.கடந்த 6 மாதங்களாக கௌரி சங்கரை சென்னைக்கு வரவழைக்க திட்டமிட்டு, திரைத்துறையினர் அவரை வசமாக பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.