September 13, 2017
tamilsamayam.com
மெர்சல் படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் வடிவேலு விஜய்க்கு அப்பாவாக நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தலை சிறந்த காமெடி நடிகரான வடிவேலு, விஜய்யுடன் இணைந்து பல இடங்களில் நடித்துள்ளார். பிரண்ட்ஸ், காவலன், சச்சின், வில்லு, சுறா, பகவதி, வசீகரா, போக்கிரி, வில்லு என இவர்கள் கூட்டணியில் உருவான அனைத்து படங்களுமே வெற்றிதான்.
இதனைத் தொடர்ந்து தெறி’ படத்தில் காமெடியனாக நடிக்க அழைத்தபோது மறுத்த வடிவேலு, இப்போது மெர்சல் படத்தில் மீண்டும் விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் கோவை சரளாவுடனும் இணைந்து நடிக்கும் வடிவேலு, விஜய்யின் வளர்ப்புத் தந்தையாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.