September 13, 2017 தண்டோரா குழு
சிங்கப்பூர் நாட்டின் குடியரசு தலைவர் தேர்தலில் அந்நாட்டின் பாராளுமன்றத்தின் முன்னாள் பேச்சாளர் ஹலிமா யாக்கோப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் தற்போது குடியரசு தலைவராக இருக்கும் அதிபர் டோனி டான் பதவிகாலம்
நிறைவடைவதால் வரும் 23-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.
இந்தாண்டு நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில்,சிறுபான்மையினரான மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக பாராளுமன்றத்தின் முன்னாள் பேச்சாளர் ஹலிமா யாகோப் அறிவித்திருந்தார்.
இதேபோல்,இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அவர்களுடைய மனுவை தேர்தல் அதிகாரிகள் பரிசீலினை செய்த பின், அவர்களுடைய மனு நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஹலிமா யாக்கோப் அந்த பதவிக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.மேலும் சிங்கப்பூர் நாட்டின் முதல் பெண் குடியரசு தலைவர் என்னும் பெருமையை ஹலிமா யாகோப் பெற்றார்.