September 13, 2017 தண்டோரா குழு
மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ‘ப்ரெசென்ட் சார்’ என்று சொல்வதற்கு பதில் ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்லும் பழக்கம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மத்திய பிரதேஷ் மாநிலத்திலுள்ள பள்ளிகளில் கட்டாயமாக கொடியேற்றம் முறை கடந்த ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த மாநிலத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பதிவேட்டில் உள்ள பெயர்களை ஆசிரியர்கள் கூப்பிடும்போது ‘ப்ரெசென்ட் சார்’ என்று சொல்லாமல் ‘ஜெய் ஹிந்த்’ என்று சொல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் இந்த நடைமுறை வரும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுக்குறித்து மத்தியபிரதேஷ பள்ளி கல்வி அமைச்சர் கூறுகையில்,
“மாணவர்களுக்கிடையே தேசப்பற்று உணர்வை வளர்க்கத்தான் இந்த முறையை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டது. ‘ஜெய் ஹிந்த்’ என்னும் வார்த்தை அனைத்து மதங்களை சேர்ந்த மாணவர்கள் ஏற்றுக்கொள்வதால் தான், இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தேன். நமது இளைய தலைமுறையினர் மறந்துவிடும் கலாச்சாரத்தை உயிருடன் இருக்க வைப்பது என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது” .இவ்வாறு அவர் கூறினார்.
‘ஜெய் ஹிந்த்’ முறையை அறிமுகப்படுத்துவதை விட, கல்வியின் தரத்தை உயர்ததவும், மாணவர்களின் படிப்பில் வெற்றி காணும் முறையை மேம்படுத்துவதில் மத்திய பிரதேஷ் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.