September 14, 2017
tamilsamayam.com
‘விவேகம்’ உலக சாதனை தொட இன்னும் 15 ஆயிரம் லைக்குகள்தான் இருக்கின்றன.
சிவா இயக்கத்தில் தல அஜீத் நடிப்பில் வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. அதையெல்லாம் ‘விவேகம்’ முறியடித்துவிட்டு தற்போது ரூ.150 கோடி வரை வசூலித்துள்ளது. சப்தமே இல்லாமல் இந்த படம் ஒரு புதிய உலக சாதனையை நெருங்கிவிட்டது.
உலகில் இதுவரை வெளியான டீசர்களில் ‘ஸ்டார் வார்ஸ்’ படத்தின் டீசருக்கு 5 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் அஜீத்தின் ‘விவேகம்’ 5 லட்சத்து 56 ஆயிரம் லைக்குகள் பெற்று இருக்கிறது. ‘ஸ்டார் வார்ஸ்’ன் உலக சாதனையை முறியடிக்க ‘விவேகம்’ படத்துக்கு இன்னும் 15 ஆயிரம் லைக்குகள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.
அதனால் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படம் உலக சாதனை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.