• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி- அமைச்சர் விஜயபாஸ்கர்

September 14, 2017 தண்டோரா குழு

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் ஊசி மூலம் மருந்து செலுத்தும் புதிய கருத்தடை முறையான அன்டாரா என்ற திட்டத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் துவக்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து பேசிய அமைச்சர்,

குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதிலும்,பேறுசார் மற்றும் குழந்தை நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

அரசு துணை சுகாதார மையங்கள் முதல்அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் வரை தமிழகம் முழுவதும் 13,882 மருத்துவமையங்களில் குடும்ப நல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும்,ஆண் கருத்தடை சிகிச்சை, பெண் குடும்ப நல அறுவை சிகிச்சை, பேறுகால பின் கவனிப்பு கருத்தடை வளையம் பொறுத்துதல், சென்ட்ரோமன் மாத்திரைகள் வழங்குதல், மருத்துவ ரீதியான கருக்கலைப்பு திட்டம் ஆகியவை குடும்ப நலத்திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை “மெட்ரோக்சி புரொஜெஸ்ட்ரோன் அசிடேட்” என்ற ஊசி மூலம் மருந்து செலுத்தப்படும் புதிய கருத்தடை முறையான ‘அன்டாரா’ என்ற திட்டம் நீண்ட காலத்திற்கு கருவுருதலைத் தடுப்பதால் குழந்தை பிறப்பில் போதிய இடைவெளியை ஏற்படுத்துகிறது.

மேலும், 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பாலூட்டும் தாய்மார்கள் உட்பட அனைத்து
தாய்மார்களும் இக்கருத்தடை ஊசியை உபயோகப்படுத்தலாம். இது தற்காலிகமாக சினைமுட்டை
உருவாவதை தடுத்து கருவுருதலை தவிர்க்கின்றது. இது பாதுகாப்பான தற்காலிக கருத்தடை ஊசி.

இந்த கருத்தடை ஊசி மூன்று மாதத்திற்கு ஒரு முறை போட்டுக் கொண்டால் போதுமானது. இந்த
கருத்தடை ஊசி போட்டு நிறுத்திய பிறகு குறைந்தது 4 மாதத்தில் இருந்து 6 மாதத்திற்குள் மீண்டும்
குழந்தை பேறு பெறலாம். முதற்கட்டமாக இந்த கருத்தடை ஊசி அரசு மருத்துவமனைகள் மற்றும்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சி அளிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும்
செவிலியர்களைக் கொண்டு தாய்மார்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் குடும்ப நலத்துறை இயக்குநர் ஜோதி. மருத்துவம் மற்றும் ஊரக நலப்
பணிகள் இயக்குநர் பானு, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் சாந்தி குணசிங்
மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க