September 15, 2017 தண்டோரா குழு
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி அக்டோபர் 31க்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்கக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனுவில் உ.பி யில் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சியின் பிளவு ஏற்பட்ட போது பெரும்பான்மை ஆதரவு உள்ளவருக்கே கட்சி சொந்தம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.இதே போல் ஓய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வெற்றி பெற்ற அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று(செப் 15) விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இரட்டை இலை யாருக்கு என்பதை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.