September 15, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவரை, அவரிடம் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த அச்சுத ரெட்டி (57) மருத்துவரான இவர் அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார்.
இம்மருத்துவமனையில் உமர் ராஷித் தத் என்பவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை மாலை டாக்டர் அச்சுத ரெட்டிக்கும் ராஷித்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு மருத்துவமனையின் மேற்பார்வையாளர் சென்று பார்த்த போது ராஷித் டாக்டரை தாக்க முயன்றார். ராஷிதிடமிருந்து தப்பித்த டாக்டர் கிளினிக்கை விட்டு வெளியே ஓடினார்.
அவரை துரத்திய ராஷீத் டாக்டர் அச்சுத ரெட்டியின் உடலில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த டாக்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து,இரத்த கறைகளுடன் ஒரு வாலிபன், காரில் அமர்ந்து இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.உடனே அங்கு சென்று, ராஷீத்தை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்று விசிட்டா நகர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.