September 16, 2017
தண்டோரா குழு
துருவங்கள் 16′ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் தனது அடுத்த படமான ‘நரகாசுரன்’ படத்தினை இன்று முதல் இயக்க துவங்கிவிட்டார்.
கெளதம் மேனன் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண், ஆத்மிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியது. நரேனின் முந்தய படம் போல இதிலும் பாடல்கள் கிடையாதாம்.
இன்றைய படப்பிடிப்பு ஆரம்பம் என்பதனை படக்குழுவினர் ஒரு போஸ்டர் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது