September 16, 2017 தண்டோரா குழு
உத்தரகாண்ட் மாநில கல்வி அமைச்சர் கணக்கு ஒன்றிக்கு தவறான விடையை கூறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரகாண்ட் மாநில கல்வி அமைச்சர் அரவிந்த் பாண்டே திங்கள்கிழமை(செப்டம்பர் 11) டேராடுன் நகரிலுள்ள மகிலா இன்டெர் கல்லூரியை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார். அமைச்சர் ஆசிரியர் மேஜையிலிருந்த சாக்கை எடுத்து (-)+(-)=? என்று ஆசிரியருடம் கேள்வி கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர் (-) என்று சரியாக பதில் அளித்தார்.
ஆனால் அதனை ஏற்காத அமைச்சர் அது தவறான பதில் என்றும் (+) தான் சரியான விடை என்றும் கூறினார். மேலும் ஆசிரியர் கூறிய சரியான பதிலை பாராட்டாமல், நீங்கள் ஒரு பெண் என்பதால், நான் உங்களை தண்டிக்கவில்லை என்று கூறினார். அமைச்சர் பண்டே அளித்த தவறான பதிலை கூறிய காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
“அந்த ஆசிரியரை அவமதிக்கும் நோக்கம் எண்ணம் எனக்கு இல்லை. அந்த வகுப்பின் மாணவிகள் எந்த புத்தகமும் வைத்திருக்கவில்லை. பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் கையில் கேள்வி பதில்கள் இருக்கும் ஒரு புத்தகம் வைத்துக்கொண்டு பாடம் நடத்திக்கொண்டிருந்தார்” என்று உத்தரகாண்ட் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.