• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பானை மேல் கூரிய கத்தி நிற்கும் அழகு சோதனை அதிசய திருவிழா.

March 8, 2016 வெங்கி சதீஷ்

திருச்செங்கோடு தாலுக்கா எலச்சி பாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாசி மாத சிவராத்திரி அமாவாசை சதய நட்சத்திரத்தின் போது நடக்கும் குண்டம் திருவிழா நடைபெற்றது.

மகாசிவராத்திரி தினத்தை அடுத்து வரும் அமாவாசையில் இந்தத் திருவிழா நடந்து வருகிறது. மலையனூர் அங்காளம்மன் கோவிலைப்போல புற்றுக் கண்ணுடன் அமைந்த கோவில் எனவும், இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் சுயம்பு என்றும் தான் மலையனூரை அடுத்து இங்கு எழுந்தருளி இருப்பதாகவும்.

அதனை நிரூபிக்கும் வகையில் ஆண்டு தோறும் சதய நட்சத்திரத்துடன் கூடிய சிவராத்திரியை அடுத்த அமாவாசை தினத்தன்று கொன்னாயாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பம்பையுடன் பிறந்த தனக்கு கோவில் பூசாரி பம்பை அடித்த படி தீமித்து காளிபட்டியில் உள்ள இந்தக் கோவிலை குல தெய்வமாக கொண்ட ஒரு குடும்பத்தினர் கொண்டு வரும் கூரிய கத்தியைத் தீர்த்த கும்பத்தின் மேல் பகல் 10மணி முதல் 12 மணிக்குள் நிறுத்த எந்த வித பிடிமானமும் இல்லாமல் கத்திநிற்கும் என அம்மன் அருள் வாக்கு கூறியதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி அலகு சோதனை என அழைக்கப்படுகிறது. இதன்படி இந்தக் கோவிலின் அதிசய திருவிழாவான அலகு சோதனை சிவராத்திரி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சிவபார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது, இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொன்னையாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து நகர் வலம் வந்தனர்.

முதலில் பம்பையை அடித்த படி கோவில் பூசாரி வெள்ளையன் தீ மிதிக்க தொடர்ந்து கத்தி ஏந்தியபடி வந்த சிவசண்முகம் குடும்பத்தினர் மற்றும் கும்பம் எடுத்து வந்தவர்கள் தீ மிதித்தனர் பின்னர் காப்புக் கட்டிய பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். கும்பம் எடுத்தவர்கள் கோவில் வாசலில் இருந்து முழங்காலில் நடந்த படி வந்து அம்மன் முன் தீர்த்த குடத்தை வைத்தனர்.

தொடர்ந்து கத்தியை கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து அம்மன் முன் இருந்த தீர்த்த கலசத்தின்மேல் வைத்தனர். சுமார் 15 நிமிடம் கத்தி அசையாமல் நின்றது. இதனைக் கண்ட பக்தர்கள் குலவையிட்டு அதங்கள் முன் அலகு சோதனைப் படி காட்சியளித்த அம்மனைப் பக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொங்கல் விழாவும், வியாழக்கிழமை மயானக் கொள்ளை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.

மேலும் படிக்க