September 18, 2017
தண்டோரா குழு
சமீபத்தில் ஓணம் பண்டிகையின் போது மலையாளத்தில் மோகன் லால் படத்தில் இடம் பெற்றுள்ள ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு கேரள பெண்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
அப்பாடலுக்கு நடமானடிய ஷெரில் என்ற பெண் மிகவும் பிரபலமானார். இதனையடுத்து அந்த ஷெர்லி என்ற பெண்ணை பல பத்திரிகை நிறுவங்கள் பேட்டி எடுத்தன. அப்போது அந்த பெண் தான் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகை என கூறியிருந்தார்.
இதற்கிடையில், இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் விஜய்க்காக ஒரு கதை எழுதி உள்ளாராம். அந்த படத்தில் இந்த ஷெர்லியை நாயகியாக நடிக்க வைக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.