September 19, 2017 தண்டோரா குழு
திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முள்ளி வாய்க்காலில் மே 17ம் தேதி லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு நினைவேந்தல் நடத்தும் விதமாக சென்னை மெரீனாவில் தடையை மீறி மே 17 இயக்கம் நினைவேந்தல் நடத்தியது.இதனால் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீது குண்டர் சட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துசெய்ய உத்தரவிட்டது.