September 20, 2017
tamilsamayam.com
தல அஜீத் ஒகே சொன்னா நாளைக்கே படப்பிடிப்புக்கு ரெடி என்று பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவே வியந்து பார்க்கும் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் அஜீத். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் அஜீத் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. தயாரிப்பாளருக்கு போதுமான லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.
இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், அஜீத்தை வைத்து இயக்க பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். தற்போது வரை அந்த முயற்சி கைகூடவில்லை. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ், ‘ஸ்பைடர்’ படத்தை அடுத்து நடிகர் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில் “அஜீத் சார் எப்போ ஓகே சொன்னாலும் அடுத்த நாளே படப்பிடிப்புக்கு தயாராக இருக்கிறேன். அவருக்கான கதையும் தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.