September 20, 2017
tamilsamayam.com
இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததற்கு கிடைத்த சின்ன கபில் தேவ் தான் ஹர்திக் பாண்டியா என முன்னாள் இந்திய கிரிக்கெட் மேனேஜர் லால்சந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி, சென்னையில் நடந்தது. இதில் இந்திய ‘டாப்-ஆர்டரை’ ஆட்டம் காண வைத்த ஆஸ்திரேலிய அணி, தோனி, பாண்டியாவின் ஆட்டத்தில் திக்கு முக்காடியது.
இந்நிலையில் சென்னை போட்டியில் பேட்டிங்கில் கலக்கிய ஹர்திக் பாண்டியா, பவுலிங்கிலும் இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்திய அணிக்கு கிடைத்த சின்ன கபில் தேவ் பாண்டியா, என முன்னாள் இந்திய கிரிக்கெட் மேனேஜர் லால்சந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லால்சந்த் கூறுகையில்,
ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். கபில் தேவிற்கு பின் இந்திய அணிக்கு கிடைத்த கச்சிதமான ஆல் ரவுண்டர் பாண்டியா தான். முதலில் டி-20 போட்டிகளுக்கு மட்டும் தான் அவர் சரிப்பட்டு வருவார் என்ற கருத்துக்களை தற்போது பொய் என அவர் நிரூபித்துள்ளார். என்றார்.