September 20, 2017
தண்டோரா குழு
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக லிங்குசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மதுரை திருவிழா போன்ற அரங்கில் இன்று தொடங்கப்பட்டது. முதலில் படத்துக்கான பூஜை போடப்பட்டது.
இதில் இயக்குநர் லிங்குசாமி, ராஜ்கிரண் மற்றும் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றார்கள். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் தான் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. மேலும், இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியிட கூடும் என்று கூறுகின்றனர்.