September 20, 2017
தண்டோரா குழு
லட்சுமி ராயின் ஜூலி2 படத்தின் ட்ரெய்லரை இதுவரை 50 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன்பின் வாமணன், காஞ்சனா, மங்காத்தா என பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
இதையடுத்து, முதல் முறையாக பாலிவுட்டில் களமிறங்கும் லட்சுமி ராய் தீபக் ஷிவ்தாசனி தயாரித்து இயக்கியுள்ள ஜூலி 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் பெண் ஒரு நடிகையாவதற்கு என்ன மாதிரியான கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பது குறித்த கதைகளம் ஆகும். இதில் லட்சுமி ராய் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. ட்ரெய்லர் வெளியான 15 நாட்களில் 52 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். இதனால் பாலிவுட்டில் லட்சுமி ராய்க்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.