September 20, 2017
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கி வருகிறார் விஜய் சேதுபதி. தொடர் வெற்றியை சந்தித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக எடக்கு என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் K.பாலு தயாரிக்கும் இப்படத்தை S.சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறாராம்.
இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் பாலு கூறும்போது,
விஜய் சேதுபதியின் திறமையை மீண்டும் நிரூபிக்கும் படமாக இப்படம் அமையும். மேலும் இப்படத்தின் திரைக்கதையும் மிக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது ஏனெனில் இது ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டப் படம். இப்படத்தில் விறுவிறு சண்டைக் காட்சிகளை தவசிராஜ் கடினமாக உழைத்து வடிவமைத்திருக்கிறார் எனக் கூறியுள்ளார்.