September 21, 2017
தண்டோரா குழு
ஜோதிகா நடிப்பில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் அண்மையில் வெளியான படம் ‘மகளிர் மட்டும்’.தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகை ஜோதிகா சமீபத்தில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில், அவரிடம் அஜித் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிகா,
‘என்னுடைய ஆரம்ப காலத்தில் அஜித்துடன் சில படங்களே நடித்துள்ளேன். அவர் மிகவும் அருமையான மனிதர். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது தான் அஜித், ஷாலினி காதல் பெரிதாக பேசப்பட்டது’ என்று கூறியுள்ளார்.