June 11, 2016
தண்டோரா குழு
பிரதமர் மோடியின் அமெரிக்கப் பாராளுமன்ற உரையின் பயனாக, பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவைத் தாக்கும் திட்டத்தைத் தீட்டக் கூடாது என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. எந்தவித தீவிரவாத பயிற்சிகளுக்கும் பாகிஸ்தான் இடமளிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தியுள்ளது.
மோடி அமெரிக்காவில் நிகழ்த்திய உரை உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்துள்ளது. உரையின் ஒரு சில பகுதி, உலகத்தையே ஒட்டு மொத்தமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரவாதத்தை,
அமெரிக்காவும், இந்தியாவும் ஒழிப்பதற்கு ஒருமித்த கருத்தோடு உழைக்க முற்படுகிறது.
தீவிர வாதத்தைப் பல கட்டங்களிலும் போராடி வெற்றி பெறவேண்டும். ராணுவத்தை உபயோகிக்கலாம், அரசியல் தந்திரம் அல்லது புத்திசாலித்தனம் போன்ற எந்த வழியையாவது பின்பற்றி தீவிரவாதத்தை ஒழிக்க ஒன்று கூடி ஒரே மூச்சாகக் குரல் கொடுக்கவேண்டும்.
மேற்கு இந்திய எல்லையிலிருந்து ஆப்பிரிக்கா வரை தீவிர வாதத்திற்குப் பல பெயர்களுண்டு. லக்ஷர் இ தொய்பா தாலிபான் இஸ்லாமிக் ஸ்டேட். அனைத்துக்கும் குறிக்கோள் ஒன்றே. வெறுப்பு, கொலை, வன்முறை. இத்தீவிரவாதம் உலகம் முழுவதும் பரவி இருந்த போதும் இந்தியாவின் அண்டை நாடு அதை அடைகாக்கிறது.
உபதேசத்துடன் நிறுத்தாமல் அனைத்து நாடுகளும் நடைமுறையிலும் பின் பற்ற வேண்டும். மனித நேயமுள்ள அனைத்து மக்களும் தீவிரவாதத்தை ஒழிக்கப் பாடுபட வேண்டும். என்று மோடி தனது உரையில் வற்புறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா, மோடியின் சந்திப்புக்குப் பின் பேசிய USன்மா நிலப் பேச்சாளரான மார்க்டோனர், இந்தியாவைத்தாக்க பாகிஸ்தான் தனது எல்லைக்குள் எந்தத் தீவிரவாத திட்டமும் தீட்டக் கூடாது என்று எச்சரித்துள்ளார்.
அண்டை நாட்டுடன் நல்உறவு வைத்துக்கொள்ள பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தும். பாகிஸ்தானும் இந்தியாவும் நடைமுறை ஒத்துழைப்பாலும், நேருக்கு நேர்வி வாதிப்பதாலும் மிகுந்த நன்மைகள் அடையும் அனாவசிய பதட்டங்கள் குறையும்.
அதற்கு முதல் படியாக எந்தவிதத்திலும் தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிக்கக்கூடாது என்றும் உறுதிப்படக் கூறியுள்ளார். மேலும் டோனர், தெற்கு ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் பரஸ்பரம் ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு உறவை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒபாமாவும், மோடியும் பல அரசியல் விஷயங்களைப் பற்றி விவாதித்தனர். பாகிஸ்தான் மண்ணில் ஊக்குவிக்கப்படும் தீவிரவாதத்தைப் பற்றியும், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானின் தாக்குதல் திட்டம் பற்றியும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். அதன் விளைவாகவே பாகிஸ்தானை அமெரிக்கா இந்தியாவின் விஷயத்தில் எச்சரித்துள்ளது.
இதற்கு முன்பு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 8F-16 போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்திருந்தது ஞாபகமிருக்கலாம். 700 மில்லியன் டாலர் மதிப்புள்ள இவ்விமானங்களை 270 மில்லியன் டாலர்களுக்கு மானிய விலையில் விற்பதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது. இச்செயலுக்கு அமெரிக்க சட்டவல்லுனர்களும் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்தன.
பாகிஸ்தான் இவ்விமானங்களை, குறிப்பாக இந்தியாவைத் தாக்குவதற்காகவே கொள்முதல் செய்கின்றது என்ற கருத்து வலுத்த காரணத்தால் அமெரிக்கா, மானியத்தை ரத்து செய்து முழுத் தொகையையும் செலுத்த வலியுறுத்தியது.
இந்நிகழ்வை மனத்தில் கொண்டே, போதிப்பதை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று அமெரிக்காவை சூசகமாகத் தாக்கி மோடி தனது உரையில் கூறியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
எது எவ்வாறாயினும் தீவிரவாதிகள் இந்தியாவைத் தாக்குமுன் இந்தியாவின் பலத்துடன், இந்தியாவின் ஆதரவாளர்களின் பலத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பது மோடியின் முயற்சிக்குக்கிடைத்த வெற்றி.