• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கௌசிகா நதிக்குநீர் செரிவூட்ட 200கிணறுகள் அமைக்க திட்டம்

September 23, 2017

கௌசிகா நதிக்கு நீர் வரும் சிறு ஓடைகளில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட நீர் செரிவூட்டும் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுக் குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
“கோவை மாவட்டம் சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை கொண்டு கௌசிகா நதிக்கு செல்லும் சிறு ஓடைகளில் நீர்செரிவூட்டும் கிணறு அமைக்கப்பட்டுவதற்கு விஞ்ஞான ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆய்வின் அடிப்படையின் நீர் செரிவூட்டும் கிணறு மற்றும் சிறு கற்காளல் ஆன தடுப்பு ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தில் சர்க்கார் சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கௌசிகா நதிக்கு நீர் வரும் சிறு ஓடைகளில் மொத்தம் 200க்கும் மேற்பட்ட நீர் செரிவூட்டும் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் இதே போல் சூலூர், அன்னூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியங்களிலும் 600க்கும் மேற்பட்ட நீர் செரிவூட்டும் கிணறு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் நிலையில் இந்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயாந்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கௌசிகா நதியை வற்றாத ஜீவ நதியாக மாற்றுவதே இத்திட்டத்தின் சீரிய நோக்கமாகும்.

ஒவ்வொரு நீர் செரிவூட்டும் கிணறு 15 அடி நீளம், 6 அடி அகலம் தோண்டப்பட்டு அதனுள் 4 அடி விட்டம் கொண்ட சிமெண்ட் உறை இறக்கப்பட்டு அதை சுற்றிலும் கருங்கற்களால் நிரப்ப்படும். ஓடைகளில் மழை நீர் வரும்போது இந்த கிணற்றில்; சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீர் மட்டம் உயரும். இப்பணியானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியார்களை கொண்டு செயல்படுத்தப்படும்.

இந்த செரிவூட்டும் கிணறு அமைப்பதால் வறட்சிக் காலங்களில் விவசாய நிலங்களில் பயிர்களைக் காத்திட பயன்படுகிறது. கால்நடைகளின் சுகாதாரமான பராமரிப்பு மற்றும் அவற்றின் குடிநீர் உபயோகத்திற்கு பயன்படுகிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க