September 25, 2017
தண்டோரா குழு
கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் செப் 30ம் தேதியுடன் முடிகிறது.
இதனால் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் நடிகை ஒருவர் வீட்டுக்குள் நுழைவதைக் காட்டினர்.
ஆனால் அவரது முகம் காட்டவில்லை. அவரது கையில் பலூனுடன் உள்ளே வந்தார். அதனையடுத்து அந்த பிரபலம் ‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அஞ்சலி என்று தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.
இவர் இந்த வீட்டில் உள்ளோருடன் இணைந்து ‘ஷட் அப் பண்ணுங்க’ பாடலுக்கு நடனமாடுகிறார். மேலும் இது ஓவியா கூறிய வார்த்தையை வைத்து எழுதி இசையமைக்க பட்ட பாடல் என்று கூறுகிறார். இதுக்குறித்து ஆரவ்விடம் பிந்து மற்றும் ஹரிஷ் கூறுகின்றனர்.