September 25, 2017 தண்டோரா குழு
நாட்டில் உள்ள அனைவருக்கும் மின்சாரம் என்பதை உறுதி செய்யும் சவ்பாக்யா யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவையொட்டி புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி
வைத்தார். அப்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் மின்சாரம் என்பதை உறுதி செய்யும் சவ்பாக்யா யோஜனா என்ற திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் படி 2019 மார்ச் 31-க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
வறுமைக்கு கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு ரூ.500-க்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. மின் இணைப்புக்கான தொகையை 10 தவணைகளில் செலுத்தலாம் என்ற திட்டமும் அறிமுகமாகிறது.
2011 சமுக பொருளாதார கணக்கெடுப்பின் படி பயனாளர்கள் கணக்கிடப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் அதிகாரிகள் உரியவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற வேண்டும். மொத்த செலவினத்தில் 60% மத்திய அரசும், 10% மாநில அரசும் 30% கடனாகவும் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.